பக்கம் எண் :

998

2529.







அடுத்தடுத்த கத்தியோடு
     வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய்
     துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா
     னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு
     வல்லமாகில் நல்லமே.              2
2530.







கங்குல்கொண்ட திங்களோடு
     கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை
     சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூ
     லுருத்திரா துருத்திபுக்
கெங்குநின் னிடங்களா
     அடங்கிவாழ்வ தென்கொலோ.       3


படச் சொல்லாத முன்பே அன்பர் நினைத்தவற்றைச் சொன்னவாறு அறியும்
உனக்கு யாம் உணர்த்தும் வன்மை யுடையோமோ? இல்லை, எனலுமாம்.

     2. பொ-ரை: சடையில் அகத்திப்பூ, வன்னி, வில்வம் கொன்றை
மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே! திருத்துருத்தியில்
எழுந்தருளியவனே! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில்
உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில்
வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம்.

     கு-ரை: சிவபிரான் சடையில், அகத்த்திப்பூ, வன்னியிலை,
கொன்றைமலர், வில்வம் என்பவற்றை அடுத்தடுத்து வைத்துத் தொடுத்த
மாலையை அணிந்துளான் என்னும் உண்மை வேறுயாண்டும் காண்டல்
அரிது.

     3. பொ-ரை: கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு
கங்கையும் தங்கிய செஞ்சடையையும், சங்கால் இயன்று விளங்கும்