பக்கம் எண் :

997

98. திருத்துருத்தி

பதிக வரலாறு:

     ஆளுடைய பிள்ளையார் அழுந்தூர் மாடக்கோயிலின்
வான்பொருளினை வணங்கிப்பரவி மீண்டு, திருத்துருத்தியின் இறைவராகிய
சொன்னவாறறிவாரைத் தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். திருவிராகம்

                      பண்: நட்டராகம்

ப.தொ.எண்: 234   பதிக எண்: 98

                      திருச்சிற்றம்பலம்

2528.







வரைத்தலைப் பசும்பொனோ
     டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண்
     டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக்
     கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்
     குணர்த்துமாறு வல்லமே.           1


     1. பொ-ரை: மலைகளிலிருந்து பொன்னையும், அரிய
அணிகளையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக்
கரையிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே!
சொன்னவாற றிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ?

     கு-ரை: காவிரியிலிருந்து கிளைத்த விக்ரமம் என்னும்
ஆறுசெல்ல அவற்றைச் சார்ந்திருத்தலின் துருத்தி எனப்பட்ட
இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் சொன்னவாறறிவார் என்பது. அது
கருதி, உரைத்தலைப்பொலிந்த-சொன்னவாறறிதலில் விளங்கிய உனக்கு
உணர்த்துமாறு வல்லோமோ? வல்லோம் அல்லோம். அறிவார்க்கு
அறிவிப்பது எப்படி என்றவாறு. பொலிந்த உனக்கு என்பதில்
பெயரெச்சத்து அகரம் தொக்கது. சொன்னவாறு அறியவல்ல உனக்கு
உரைத்தலைப் பொலிந்து உணர்த்துமாறு வல்லமோயாம்? வெளிப்