|
தலைபறித்த
கையர்தேரர்
தாந்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான்
திருந்துகாழி சேர்மினே. 10 |
2527.
|
தக்கனார்
தலையரிந்த
சங்கரன் தனதரை
அக்கினோ டரவசைத்த
வந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன்
உரைத்தபாடல் வல்லவர்
மிக்கவின்ப மெய்திவீற்
றிருந்துவாழ்தன் மெய்ம்மையே. 11
திருச்சிற்றம்பலம்
|
கு-ரை:
பெற்றவரை வழிபட்ட மக்களும் பல நாள் படுக்கையிற்
கிடந்து வருந்தும் அப்பெற்றோர்க்கு அவ்வப்போது வேண்டுவன செய்து
சலித்து, வெறுத்து, இவ்வாறுகிடந்து தாமும் துன்புற்று நம்மையும்
துன்புறுத்தும் இவர்கள் இருப்பதினும் இறப்பதே நன்று, என முன்னைய
நிலையை வெறுப்பர். அதனை நிலைவெறுத்தநெஞ்சம் என்றார். வெறுத்தல்,
செறிதல், நெருங்கல்.
11.
பொ-ரை: தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது
இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய
சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த
இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து
வாழ்தல் உண்மையாகும்.
கு-ரை:
தலையரிந்தசங்கரன் என்றதால், தலை அரிந்த கொடுமை
செய்தல் கடவுட்குத்தகுமோ? என்பார்க்குச் சுகத்தைச் செய்பவன்
அசுகத்தை விளைக்குமளவு மிக்க அபராதங்களைத் தக்கன் செய்தான்
என்றும், ஆண்டும் சிவபிரான் மறக்கருணையால் ஆண்டு சுகத்தையே
பின்விளைவாகச் செய்தான் என்றும் உணர்க.
|