|
மைமிகுத்த
மேனிவா
ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப்
பரமர்காழி சேர்மினே.
8 |
2525.
|
காலினோடு
கைகளுந்
தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா
ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன்
மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார்
நிகழ்ந்தகாழி சேர்மினே. 9 |
2526.
|
நிலைவெறுத்த
நெஞ்சமோடு
நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி
யேமுனிவ தன்முனந் |
கு-ரை:
ஐமிகுத்த கண்டர்-கோழை பெருகிய கழுத்தினர் இரைப்பது
என்பது கோழைகட்டியபின் பேசமுடியாமல் மூச்சுடன் வரும் ஒலி.
9. பொ-ரை: கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய
நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து
பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத
நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.
கு-ரை:
காலுங் கையுந்தளர்ந்து, நோய்மிகப் பெற்றமையால்,
அன்பொடு உபசாரங்கள் செய்து போற்றிவந்த மனையிவரும்
இகழ்ந்துரைக்கும் இழிவை அடையும் முன்னரே காழிசேர்மின் என்க.
ஏலம்-மயிர்ச்சாந்து.
10. பொ-ரை: பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற
முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலானோர்
முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர்
ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும்
ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக.
|