பக்கம் எண் :

994

விண்குலாவு தேவருய்ய
     வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெம்
     கருத்தர்காழி சேர்மினே.           5
2523.







அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற்
     கவத்தமேபிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற்
     கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற்
     பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான்
     கோலக்காழி சேர்மினே.           6
         * * * * * * * *               7
2524.



பொய்மிகுத்த வாயராய்ப்
     பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா
     யடுத்திரைப்ப தன்முனம்


     6. பொ-ரை: துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப்
பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக.
பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து
ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை
அடைவீர்களாக.

     கு-ரை: அவத்தம்-(அபத்தம்) தவறு பொய். பலிக்கு இயங்கு
பான்மையான், இயங்குதல்-நடத்தல்.

     7. * * * * * * * *

     8. பொ-ரை: மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப்
பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு
அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ்
நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும்
ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக