பக்கம் எண் :

1002

2535.







சுடப்பொடிந் துடம்பிழந்
     தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந்
     துருத்தியாக வெண்ணினாய்
கடற்படை யுடையவக்
     கடலிலங்கை மன்னனை
அடற்பட வடுக்கலில்
     லடர்த்தவண்ண லல்லையே.         8
2536.



களங்குளிர்ந் திலங்குபோது
     காதலானு மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல்
     வணங்கிவந்து காண்கிலார்


     கு-ரை: கணிச்சி படை-கணச்சியம்படை, மழுப்படை கழிந்தவர்-
நூறுகோடி பிரமர்கள் நொந்தினார், ஆறு கோடி நாராயணர் அங்கனே,
ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர், ‘ஈறிலாதவன் ஈசன் ஒருவனே’
(தி.5 ப.100 பா.3.) என்றதிற் குறித்தவர்கள், துணி சிரம் கிரந்தை-துணிந்த
தலைமுடிச்சு; தலை மாலையை அணிந்தவனே; கரந்தையாய்-
சிவகரந்தையைச் சூடியவனே’

     8. பொ-ரை: நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த
மன்மதன் இடர்ப்பட, அவனை வென்று தமக்கு இடமாகத்
திருத்துருத்தியைக் கொண்டவரே! கடற்படையை உடைய இலங்கை
மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த
தலைமையாளர் அல்லிரோநீர்.

     கு-ரை: நெற்றிக்கணால் சுட்டொழிக்க, சாம்பராகி மெய்யிழந்த
உருவிலியாகிய மன்மதன். இடர்ப்படும்படி வென்று துருத்தி இடம் ஆகத்
திருவுள்ளம் கொண்டருளினை. கடல் போலும் பெரும் படையை உடைய
அப்பிரசித்திபெற்ற கடலின் நடுவே உள்ள இலங்கைக்கு வேந்தனை.
கொலை உறத் திருக்கயிலை மலையை அழுத்தி அடர்த்த இறைவன்
அல்லையோ?

     9. பொ-ரை: தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப்
போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய