பக்கம் எண் :

1003

துளங்கிளம்பி றைச்செனித்
     துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா
     முகந்துகந் துரைப்பனே.             9
2537.







புத்தர்தத் துவமிலாச்
     சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா
     துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ்
     சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப்
     பிறப்பறுத்தல் பெற்றியே.           10


திருவடிகளைக் காணாதவராயினர். ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய
சென்னியினராய திருத்துருத்தி இறைவரே! உம் திருவடிப் பெருமைகளை
உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன்.

     கு-ரை: கள் அம்குளிர்ந்து இலங்குபோது காதலான்-தேனுடைய
அழகிய குளிர்வுற்று விளங்கும் தாமரைப்பூவை விரும்புவன். களம்
இடமுமாம், போது ஆகிய களம், களமாகியபோது களம் போது ஆகக்
காதலிப்பவன்.

     10. பொ-ரை: புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய
சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது,
வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து, துத்தம் என்னும் சுருதியில் பாடும்
பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு
செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும்.

     கு-ரை: உத்தமம் எனக் கொள்ளாது மேகம் துத்தம்-ஏழிசையுள்
ஒன்றானது. பித்தர் பித்தன்:- பித்தர்க்கெல்லாம் பித்தனாயிருப்பவனைத்
தொழுதலால் பிறவிப் பெருங்கடலைத் தீர்த்தலே பெற்றிமையாகும்.