பக்கம் எண் :

1004

2538.







கற்றுமுற்றி னார்தொழுங்
     கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினா
     னவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன்
     பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற்
     குணங்கள்வந்து கூடுமே.           11


                 திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும்
கழுமலத்துள் தோன்றிய, அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த
ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக்கொடியை
ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர்
ஆவர். அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும்.

     கு-ரை: சுற்றும் முற்றும் ஆயினன்-சுற்றிலும் முற்றிலும் ஆகிய
சிவபிரான். பெற்றம்-எருது எழுதிய கொடிக்கு ஆகுபெயர்.

திருஞானசம்பந்தர் புராணம்

செழுந்திரு வேள்விக் குடியில்
     திகழ்மணவாளநற் கோலம்
பொழிந்தபுனல் பொன்னி மேவும்
     புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையுங் கூடத்
     தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
     கோடிகாவிற் சென்றடைந்தார்.

                        -சேக்கிழார்.