பதிக வரலாறு:
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்
திருவேள்விக்குடி திருத்துருத்தி
என்னும் தலங்களைப்பரவி மணாளக்கோலத்தைத் தழும்பிவிய தன்மையும்
கூடப்பாடித், திருக்கோடிகாவில் தேவர் சிகாமணியைப் பாடியது
இத்திருப்பதிகம்.
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
235 |
|
பதிக எண்:
99
|
திருச்சிற்றம்பலம்
2539.
|
இன்றுநன்று
நாளைநன்
றென்றுநின்ற விச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப்
போகவிட்டுப் போதுமின்
மின்றயங்கு சோதியான்
வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான்
கோடிகாவு சேர்மினே. 1 |
1.
பொ-ரை: இன்றையநாள் நல்லது. நாளைய நாள் நல்லது என்று
இச்சையால் காலங் கடத்திப் பெருமானை வழிபடாது அழிந்தொழியும்
வாழ்க்கையைப் போக்கி மெய் வாழ்வினை அடைய வாருங்கள். மின்னல்
போன்ற ஒளியினனும், வெண்மதி, கங்கை, கொன்றை ஆகியவற்றை முடியில்
சூடியவனுமாகிய சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச்
சென்றடைவீர்களாக.
கு-ரை:
இத்திருப்பதிகம் முழுதும் உள்ள உபதேசத்தை
உணர்ந்தொழுகுக. பொய் வாழ்க்கையைப் போக்கி, மெய்
வாழ்க்கையைப் பெறும் அன்புற்று வம்மின் உலகீர். சிவபெருமான்
எழுந்தருளிய திருக்கோடிகாவைச் சேர்மின். (தி.5 ப.78 பா.2,6.)
(ஐயடிகள் க்ஷேத்திரவெண்பா. 6.)
|