2540.
|
அல்லன்மிக்க
வாழ்க்கையை
யாதரித் திராதுநீர்
நல்லதோர் நெறியினை
நாடுதுந் நடம்மினோ
வில்லையன்ன வாணுதல்
வெள்வளையொர் பாகமாங்
கொல்லைவெள்ளை யேற்றினான்
கோடிகாவு சேர்மினே. 2 |
2541.
|
துக்கமிக்க
வாழ்க்கையின்
சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச்
சார்தல்செய்யப் போதுமின்
அக்கணிந் தரைமிசை
யாறணிந்த சென்னிமேல்
கொக்கிற கணிந்தவன்
கோடிகாவு சேர்மினே. 3 |
2.
பொ-ரை: அல்லல் மயமான வாழ்க்கையை விரும்பியிராது நீர்
நற்கதியை அடையும் நெறியை நாடுதற்குப் புறப்படுவீர்களாக. வில் போன்ற
ஒளி பொருந்திய நுதலை உடையவளும், வெண்மையான வளையல்களை
அணிந்தவளுமாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, முல்லை
நிலத்து வெள்ளை ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானுடைய
திருக்கோடிகாவை அடைவீர்களாக.
கு-ரை:
துன்பம் மிக்க வாழ்க்கையை விரும்பியிராமல், நல்ல
தொருகதியை நாடுவோம் வம்மின், வெள்ளேற்றண்ணலது
திருக்கோடிகாவைச் சேர்மின்.
3.
பொ-ரை: துக்கம்மிகுந்த வாழ்க்கையினால் வரும் இளைப்பை
நீக்கி, நீர் தக்கதொரு நெறியை அடைய வாருங்கள். அரைமிசை என்பு
மாலையை அணிந்தவனாய், கங்கை சூடிய சடைமுடியில் கொக்கிறகு
அணிந்துள்ள சிவபிரான் உறையும் திருக்கோடிகாவைச் சேருங்கள்.
|