2542.
|
பண்டுசெய்த
வல்வினை
பற்றறக் கெடும்வகை
உண்டுமக் குரைப்பனா
னொல்லை நீ ரெழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை
வைத்துமாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான்
கோடிகாவு சேர்மினே. 4 |
2543.
|
முன்னைநீர்செய்
பாவத்தான்
மூர்த்திபாதஞ் சிந்தியா
தின்னநீரி டும்பையின்
மூழ்கிறீ ரெழும்மினோ
பொன்னைவென்ற கொன்றையான்
பூதம்பாட வாடலான்
கொன்னவிலும் வேலினான்
கோடிகாவு சேர்மினே. 5 |
கு-ரை:
துக்கம் மிக்க வாழ்க்கையினால் வரும் இளைப்பை ஒழித்து.
தக்கதொருகதியை அடையத் திருக்கோடிகாவைச் சேர்மின்.
4. பொ-ரை:
முற்பிறவிகளில் செய்த வலிய வினைகள் முழுவதும்
அழிந்தொழிதற்குரிய வழி ஒன்றுண்டு அதனை உங்கட்குக் கூறுகிறேன்.
விரைந்து நீங்கள் புறப்படுவீர்களாக. செஞ்சடையில் கங்கையைச் சூடி
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள மார்பினனாய சிவபிரானது
திருக்கோடிகாவை அடைவீர்களாக.
கு-ரை:
முற்பிறவியில் செய்த வினை பசையறக் கெடும்படி
திருக்கோடிகாவைச் சேர்மின்.
5. பொ-ரை:
முற்பிறவியில் நீர், செய்த பாவத்தால் சிவமூர்த்தியின்
திருவடிகளை நினையாது இன்னமும் நீங்கள் துன்பங்களில் மூழ்கித்
துயருறுகின்றீர்களே, புறப்படுவீர்களாக. பொன்னையும் வென்ற அழகிய
கொன்றைசூடியவனாய்ப் பூதங்கள் பாட ஆடும் இயல்பினனும், கொல்லும்
தன்மை வாய்ந்த வேலிகனை உடையவனும் ஆகிய சிவபிரான் உறையும்
திருக்கோடிகாவை அடைவீர்களாக.
|