பக்கம் எண் :

1008

2544.







ஏவமிக்க சிந்தையோ
     டின்பமெய்த லாமெனப்
பாவமெத் தனையுநீர்
     செய்தொரு பயனிலைக்
காவன்மிக்க மாநகர்
     காய்ந்துவெங் கனல்படக்
கோவமிக்க நெற்றியான்
     கோடிகாவு சேர்மினே.            6
2545.







ஏணழிந்த வாழ்க்கையை
     யின்பமென் றிருந்துநீர்
மாணழிந்த மூப்பினால்
     வருந்தன்முன்னம் வம்மினோ
பூணல்வெள் ளெலும்பினான்
     பொன்றிகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான்
     கோடிகாவு சேர்மினே.            7


     கு-ரை: முற்பிறவியில் செய்த பாவத்தால், சிவமூர்த்தியின்
திருவடியைச் சிந்தை செய்யாமல் துன்பத்தில் முழுகுகின்றீர், எழுமின்,
சிவபிரானது திருக்கோடிகாவைச் சேர்மின்.

     6. பொ-ரை: பெருமையற்ற உலகவாழ்க்கையை இன்பம் உடையது
என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு
முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்பு மாலையை அணிகலனாகப்
பூண்டு, பொன் போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச்
சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.

     கு-ரை: ஏவம்-இகழ்ச்சி குற்றம். காவல் மிக்க மாநகர்:- திரிபுரம்.

     7. பொ-ரை: பெருமையற்ற உலக வாழ்க்கையை இன்பம் உடையது
என்று நினைத்திருந்து நீர் மாண்பு அற்ற மூப்பினால் வருந்துதற்கு
முன்னரே வருவீர்களாக. வெண்மையான என்புமாலையை அணிகலனாகப்
பூண்டு, பொன்போலத் திகழும் சடைமுடியில் வளைந்த வெண்பிறையைச்
சூடிய சிவபிரானின் திருக்கோடிகாவை அடைவீர்களாக.