2546.
|
மற்றிவாழ்க்கை
மெய்யெனும்
மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி
பணிந்துவந் தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன்
விறல்கெட விருந்ததோர்
குற்றமில் வரையினான்
கோடிகாவு சேர்மினே. 8 |
2547.
|
மங்குநோ
யுறும்பிணி
மாயும்வண்ணஞ் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன்
சென்றளந்துங் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை
வேதியன் விரும்புமூர்
கொங்குலாம் வளம்பொழிற்
கோடிகாவு சேர்மினே. 9 |
கு-ரை:
மூப்படைந்து. அதனால் தளர்ச்சி எய்தி வருந்துவதன்
முன்னரே, வம்மின்; திருக்கோடிகாவைச் சேர்மின். ஏண்-பெருமை.
பொன்போலும் சடையில் வெண் பிறையைச் சூடியவன்.
8. பொ-ரை:
இவ்வாழ்க்கையை மெய்யென்று கருதும் எண்ணத்தை
விடுத்துச் சிவபிரான் திருவடிகளைப் பணிந்து பற்றி வாழ்வீர்களாக.
வெற்றியையே பெற்று வந்த இராவணனின் வலிமையை அழித்த குற்றமற்ற
கயிலை மலைக்கு உரியவனாகிய அச்சிவபிரானின் திருக்கோடிகாவை
அடைவீர்களாக.
கு-ரை:
இது மெய்வாழ்க்கை அன்று என்று நீக்கித்
திருக்கோடிகாவைச் சேர்மின்.
9. பொ-ரை:
வாழ்வை மங்கச் செய்யும் நோய்க்குக் காரணமான
வினைகள் அழிதற்குரிய உபாயம் ஒன்றைச் சொல்லுவேன் கேளுங்கள்.
செங்கண் மாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணுதற்கியலாத
பெருமையனும், வெவ்விய கண்களைக் கொண்ட பெரிய
|