2548.
|
தட்டொடு
தழைமயிற்
பீலிகொள் சமணரும்
பட்டுடை விரிதுகிலி
னார்கள்சொற் பயனிலை
விட்டபுன் சடையினான்
மேதகும் முழவொடும்
கொட்டமைந்த வாடலான்
கோடிகாவு சேர்மினே. 10 |
2549.
|
கொந்தணி
குளிர்பொழிற்
கோடிகாவு மேவிய
செந்தழ லுருவனைச்
சீர்மிகு திறலுடை |
விடையூர்தியை உடைய
வேதியனுமாகிய சிவபிரான் விரும்பும் தேன்
நிறைந்த பொழில் சூழ்ந்த திருக்கோடிகாவை அடைவீர்களாக.
கு-ரை: நோய் அடைதற்கு ஏதுவாகிய கட்டு, உடலையும் அதைச்
சார்ந்து உயிரையும் பிணித்தலால் பிணி எனப்பட்டது. பிறவிப் பிணி
அழியும் வகை சொல்வேன். திருமாலும் நான்முகனும் சென்று அளந்தும்
காணமாட்டாத பெருமையன்.
10.
பொ-ரை: தட்டோடு, தழைத்த மயிற் பீலியை ஏந்தித்திரியும் சமணர்களும்,
பட்டால் ஆகிய விரிந்த ஆடையைப் போர்த்த புத்தர்களும் சொல்வன பயனற்ற சொற்களாகும்.
தொங்க விட்ட சடையினனாய் மேதகு முழவு கொட்ட ஆடுபவனாய் விளங்கும் சிவபிரானின்
கோடிகாவை அடைவீர்களாக.
கு-ரை: சொல்லுஞ் சொல் பயனில்லை. தொங்கவிட்ட பொன்னார்
செஞ்சடை.
11.
பொ-ரை: பூங்கொத்துக்களை உடைய குளிர்ந்த பொழில்
சூழ்ந்த திருக்கோடிகாவில் எழுந்தருளிய செந்தழல் உருவனை, சிறப்புமிக்க
திறனுடைய அந்தணர்கள் வாழும் புகலியுள் தோன்றிய வேதங்களில் வல்ல
ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகத்தமிழை வல்லவர்களின் பாவங்கள் நீங்கும்.
|