|
அந்தணர்
புகலியு
ளாயகேள்வி ஞானசம்
பந்தன தமிழ்வல்லார்
பாவமான பாறுமே. 11
|
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
திருக்கோடிகாவை மேவிய அந்தணர் வாழும், திருப்புகலியுள்
ஆய்ந்த மறையாகிய வேள்வியையுடைய திருஞானசம்பந்தருடைய இத்தமிழ்
மாலை பாட வல்லவர் பாவம் போக்குவர். கொந்து-பூங்கொத்து. கேள்வி-
சுருதி. அந்தணர் புகலி என்றதால் அங்கு அக்காலத்தில் சிவபத்தியிற் சிறந்த
அந்தணர் பலர் இருந்தமையும், அதிற் சிறவாதாரைக் கூறார் என்பதும்,
கூறியது கொண்டு அவரை நாமும் இப்பொழுது நினைந்து பணிந்து நலம்
பெறலாயிற்று என்பதும் உணர்க.
திருஞானசம்பந்தர்
புராணம்
திருக்கோடி
காவில் அமர்ந்த தேவர்சிகா மணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும் இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்துசொன் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீ்ப்பார்கள் சேருங் கஞ்சனூர் கைதொழச் சென்றார்.
-சேக்கிழார்.
|
|