100.
திருக்கோவலூர்வீரட்டம்
|
பதிக
வரலாறு:
திருமறைச் சிறுவர்
திருவாமாத்தூரை அணைந்து போற்றித்
திருக்கோவலூரைச் சேர்ந்து ஏத்திப் பாடியது இத்திருப்பதிகம்.
திருவிராகம்
பண்:
நட்டராகம்
ப.தொ.எண்:
236 |
|
பதிக
எண்: 100 |
திருச்சிற்றம்பலம்
2550.
|
படைகொள்கூற்றம்
வந்துமெய்ப்
பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை
யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை
குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான்
வீரட்டானஞ் சேர்துமே. 1 |
1.
பொ-ரை: படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப்
பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில்
இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை. நெஞ்சே! எழுக.
என்னோடு போதுக. வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலையமானின்
முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனுமாய்க்
கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம்.
கு-ரை:
பாசம்-கயிறு; எமபாசம். நெஞ்சமே எழுக, போதுக.
வெண்கொற்றக் குடையைக்கொண்ட மலையமான் முது தாதையாகிய
குழகன் சிவபிரான். குழகன் இத்தலத்தின் இறைவன் திருப்பெயர்;
(பா. 3,6,9) விடையது-அது பகுதிப் பொருள் விகுதி. வீரட்டானம்,
வீரஸ்தாநம்.
|