பக்கம் எண் :

1164

2789.







உரிந்தகூறை யுருவத்
     தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன்
     பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள்
     ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல்
     பாதிரிப்புலி யூரையே.   10
2790.









அந்தண்நல் லாரகன்
     காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில்
     பாதிரிப் புலியூர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத்தி
     வைதரித் தார்கண்மேல்
வந்துதீயவ் வடையாமை
     யால்வினை மாயுமே.      11

     திருச்சிற்றம்பலம்



உண்மை - திருமுறையில் முதற்பாட்டில் உணர்த்தப்பட்டது. முன்னம்...
அளந்தவன் - திருவிக்கிரமன். தன்னம் - அற்பம். திருவடியாக்
கொள்ளின் இனம்பற்றித் திருமுடியும் கொள்ளப்படும்.

     10. பொ-ரை: ஆடையின்றித் தெருவில் திரிந்து தின்னும்
அற்பவிரதத்தை உடைய சமணரும், புத்தரும் எரிவினால் சொல்லும்
உரைகளைக் கொள்ளாது. திருவெண்ணீறு அணிந்த திருப்பாதிரிப்புலியூர்
அண்ணலைப் புகழ்ந்து போற்றுங்கள்.

     கு-ரை: உரிந்த. . . நோன்பர் - ஆடையின்றித் தெருவில் திரிந்து
தின்னும் அற்பவிரதத்தையுடையவர் என்னும் சமணர். எரிந்து சொன்ன
உரை:- எரிவினாற்சொன்னார்.

     11. பொ-ரை: அந்தணர்கள் நிறைந்துவாழும் அகன்ற சீகாழிப்
பதியில் திருஞானசம்பந்தன், நல்லவர் வாழும் திருப்பாதிரிப்