2787.
|
வீக்கமெழும்
மிலங்கைக்
கிறை விலங்கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ்
விரலாலிறை யூன்றினான்
பூக்கமழும் புனற்
பாதிரிப் புலியூர்தனை
நோக்கமெலிந் தணுகா
வினைநுணு குங்களே. 8 |
2788.
|
அன்னந்தாவும்
மணியார்
பொழின்மணியார் புன்னை
பொன்னந் தாதுசொரி
பாதிரிப் புலியூர்தனுள்
முன்னந்தாவி அடிமூன்
றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத
தோர்தவ நீதியே. 9 |
8.
பொ-ரை: பெருமை மிக்க இலங்கைக்கு அரசனாகிய இராவணன்
கயிலை மலையிடைத்தனது செருக்கழிந்து அலறுமாறு கால் விரலை
ஊன்றிய இறைவன் எழுந்தருளிய மலர் மணம் கமழும் நீர் வளம் சான்ற
பாதிரிப்புலியூரை நோக்க வினைகள் மெலிந்து நுணுகி ஒழியும்.
கு-ரை:
வீக்கம் - பெருமை. விலங்கல் - கயிலை, இறை-சிறிது.
நோக்க-நோக்குதலால்-வினைமெலிந்து. அணுகா. நுணுகுங்கள் (ஒழியுங்கள்
பா. 2)
9.
பொ-ரை: அன்னங்கள் விளையாடும் அழகிய சோலைகளில்
முத்துமணி போன்ற புன்னை மலர்கள் பொன்போலும் தாதுக்களைச்
சொரியும் திருப்பாதிரிப்புலியூரில், முற்காலத்தே எல்லா உலகங்களையும்
தாவி மூன்றடியால் அளந்த திருமாலும், நான்முகனும், சிறிதேனும்
திருத்தாளையும் திருமுடியையும் அறிய முடியாதவராய்த் தவத்தின் நேரிய
நீதி வடிவினராய்ப் பெருமான் விளங்குகி்றார்.
கு-ரை:
புன்னை பொன்போலும் தாதுக்களைச் சொரியும்
|