2785.
|
மதியமொய்த்த கதிர்போ
லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ்
பாதிரிப் புலியூரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை
தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ்
செய்வர் குழகாகவே. 6
|
2786.
|
கொங்கரவப்
படுவண்
டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின்
னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர்
பாதிரிப் புலியூர்தனுள்
அங்கரவம் அரையில்
அசைத்தானை அடைமினே. 7 |
யுண்டான். நல்லோர்
பரவ நச்சு வெப்பத்தையுடைய ஐந்தலைப் பாம்பை
விரும்பி அரையிற்கட்டியவன். போகமாதர் பயிலும் புலியூர்.
6.
பொ-ரை: பழ அடியார்கள் அழகாக ஆகம விதிகளின்படி
வழிபாடு செய்யவும் ஆனந்தக் கூத்தாடவும் நிலவொளி போன்று
வெண்மணல் பரவிய கடற்கரைச் சோலை இடத்தே புதிய முத்துக்கள்
திகழும் திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி உள்ளார் இறைவர்.
கு-ரை:
மணல்நிலாப்போல் ஒளிர்கின்றது. பழந்தொண்டர்கள்
அழகாக ஆனந்தக்கூத்தும் ஆகமவிதியும் செய்வர்.
7.
பொ-ரை: பூந்தாதுகளின் வண்டுகள் செய்யும் ஒலி கடற்கரைச்
சோலைகளில் சங்குகளின் ஒலி, பறைமுழவு ஆகிய ஒலிகள் கூடி
ஆரவாரம் மிகுந்து தோன்றும் திருப்பாதிரிப் புலியூரில் இடையிலே
பாம்பைக் கச்சாக அணிந்து எழுந்தருளிய பரமனை அடையுங்கள்.
கு-ரை:
பூந்தாதுகளில் ஒலிசெய்யும் வண்டுகள், சங்கொலி, பறையின்
ஒலி, பாம்பரையார்த்த பரமனை அடையுங்கள்.
|