பக்கம் எண் :

1161

2783.







போதினாலும் புகையாலும்
     உய்த்தே அடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு
     செய்யப் புலியூர் தனுள்
ஆதிநாலும் அவலம்
     மிலாதஅடி கள்மறை
ஓதிநாளும் இடும்பிச்சை
     யேற்றுண் டுணப்பாலதே.    4
2784.







ஆகநல்லார் அமுதாக்க
     வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந்
     தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும்
     பாதிரிப் புலியூர் தனுள்
பாகநல்லா ளொடுநின்ற
     எம்பர மேட்டியே.         5


     4. பொ-ரை: மலர்கள் தூவியும் தசாங்கம் முதலிய மணமுடைய
பொருள்களைப் புகைத்தும் அடியவர்கள் காலந்தவறாமல் வழிபாடு
செய்யப் பாதிரிப்புலியூரில் உறையும் அவலம் இலாத அடிகள் நாள்
தோறும் வேதங்களை ஓதிக் கொண்டு சென்று அன்பர்கள் இடும்
பிச்சையை ஏற்று உண்ணும் இயல்பினர்.

     கு-ரை: போது - புஷ்பம். போதினால்-விதித்த காலங்களில்,
நாலும்-நான்கும். தொங்கும், பிச்சைக்குச் செல்லும்போதும் வேதம் ஓதிய
உண்மையுணர்க. உண்டு உணப்பாலது என்பதை ஆராய்தல் வேண்டும்.

     5. பொ-ரை: நுகர்ச்சிக்குரிய இளமகிளிர் பயிலும் பாதிரிப்புலியூரில்
பெரிய நாயகியாரை இடப்பாகமாகக் கொண்டுள்ள பரமேட்டி உடலின்
இடப் பாதியிலே உறையும் உமையம்மை அமுது ஆக்கிக் கொடுக்க நஞ்சை
உண்டவன். நல்லோர் பரவ நச்சு வெப்பத்தை உடைய ஐந்தலைப் பாம்பை
விரும்பி அரையில் கட்டியவன்.

     கு-ரை: உமாதேவியார் அமுதாக்கிக் கொடுக்க நஞ்சை