2781.
|
கொள்ளிநக்க
பகுவாய
பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட்
டுறையும் முதல்வன்இடம்
புள்ளினங்கள் பயிலும்
பாதிரிப் புலியூர்தனை
உள்ள நம்மேல்
வினையாயின ஒழியுங்களே. 2 |
2782.
|
மருளினல்லார்
வழிபாடு
செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில்
பாதிரிப் புலியூருளான்
வெருளின்மானின் பிணை
நோக்கல்செய்து வெறிசெய்தபின்
அருளிஆகத் திடைவைத்
ததுவும் மழகாகவே. 3 |
2.
பொ-ரை: நகும் போது தீயை உமிழும் திறந்த வாயை உடைய
பேய்கள் குழைந்தாட முள்ளிலவ மரங்கள் நிறைந்த சுடுகாட்டில் உறையும்
இறைவன் இடமாகிய, அன்னம், மயில் முதலிய பறவையினங்கள் வாழும்
திருப்பாதிரிப்புலியூரை நினைந்து வழிபட்டு நம்மேலுள்ளன ஆகிய
வினைகளை ஒழியுங்கள்.
கு-ரை:
முதல்வனது திருப்பாதிரிப்புலியூரை நினைத்து வழிபட்டு
வினைகளை ஒழியுங்கள். (நுணுகுங்கள் பா.8)
3. பொ-ரை:
மெய்ப்பொருளை அறிந்தவரும் மயக்கமற்ற
ஞானியரும் வழிபாடு செய்து வாழும் திருப்பாதிரிப்புலியுரில் வாழம்
மழவாளரைக் கண்டு மருளும் பெண்மான் போன்ற பார்வையை உடைய
பார்வதியை நோக்கி, அவளைத் தம்மீது காதல் கொள்ளச் செய்து, தம்
ஆகத்திடை வைத்து அருள்பவராய் உள்ள அப்பெருமான் செயல்மிக்க
அழகானதாகும்.
கு-ரை:
மருள் இல் நல்லார்-மயக்கமற்றஞானிகள். மேல் பொருள்
இல்நல்லார்-தனக்குமேல் ஒரு பொருள் இல்லாத சிவனார். அம்மையப்பரான
உண்மை குறித்தது.
|