121.
திருப்பாதிரிப்புலியூர்
|
பதிக
வரலாறு:
செல்வமல்கிய
தில்லை மூதூரில் திருநடம் பணிந்து, திருத்தினைநகர்
பாடித் திருமாணிகுழியை அணைந்து ஏத்தி, திருப்பாதிரிப்புலியூரை உற்று,
முன்னம் மாமுடக்கால் முயற்கு அருள்செய்த வண்ணத்தை மொழிந்து
ஏத்திப்பாடிய திருப்பதிகம்.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்:
257 |
|
பதிக
எண்: 121 |
திருச்சிற்றம்பலம்
2780.
|
முன்னநின்ற
முடக்கான்
முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா
திரிப்புலி யூருளான்
தன்னைநின்று வணங்குந்
தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக்
கையைப்பெறு வார்களே. 1 |
1.
பொ-ரை: முடங்கிய கால்களை உடைய முயலுருவத்தைப்
பெற்றுத் தன்னை வணங்கி முன்னே நின்ற மங்கண முனிவருடைய
சாபத்தைப் போக்கி அவருக்கு அருள் செய்து, நீண்ட புன்னைமரங்கள்
மணம் கமழும் திருப்பாதிரிப் புலியூரில் எழுந்தருளி இருக்கும் இறைவனை
வணங்கும் மேலான தவம் இல்லாதவர்கள் நோயால் நலியும் யாக்கையைப்
பெறுவார்கள்.
கு-ரை:
முடக்கால் முயற்கு அருள்செய்து:- இத்தலத்தில்
முற்காலத்தில் முடங்கிய காலொடு முயலாகும் சாபம்பெற்ற மங்கண
முனிவர் அச்சாபம் நீங்கப்பெற்ற வரலாற்றைக் குறிப்பது.
சிவபிரானை
வழிபடும் தவம் வாய்க்கப்பெறாதவர்கள் பிணியுடைய
உடம்பொடு வருந்துவர்.
|