2779.
|
மல்லையார்மும்
முடிமன்னர்
மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி
சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழி
யுள்ஞான சம்பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல
காளவும் வல்லரே. 11
|
திருச்சிற்றம்பலம்
உடையவன். சோழமன்னன்
எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான்
செய்யும் புதுமையான செயல் இதுவாகும்.
கு-ரை:
துகில்-ஆடை. வெற்றரை- ஆடையில்லாமை குறித்தது.
உண்பினாலே-உண்டபிறகு.
11. பொ-ரை:
மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும்
தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள்
மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச்
செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர்.
கு-ரை:
மல்-வலிமை. மும்முடி மன்னர்-முடிவேந்தர் மூவர்.
ஞானசம்பந்தன் என்று இத்திருப்பாடல்களைக் குறித்தருளினார்.
சொல்லவும் வல்லார். ஆளவும்வல்லார்.
திருஞானசம்பந்தர்
புராணம்
கற்குடி மாமலை
மேலெழுந்த
கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த
போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞானசம் பந்தர் புலன்கள்ஐந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.
-சேக்கிழார்.
|
|