2777.
|
நீருளாரும்
மலர்மேல்
உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட
மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்ன
வன்செம்பி யன்வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோர்செம்மையே. 9
|
2778.
|
வெண்புலான்மார்
பிடுதுகிலினர்
வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார்
மொழி யூனமதாக்கினான்
ஒண்புலால்வேன் மிகவல்லவ
னோங்கெழிற் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்றதோர் பச்சையே. 10
|
கு-ரை:
ஈர்க்கும் - இழுக்கும். கூர்க்கும் - கூராக இருக்கும்.
ஆர்க்கும் - ஆரவாரம் செய்யும்.
9.
பொ-ரை: சிறப்புமிக்க தென்னவன், செம்பியன், வில்லவன்
ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில், உறையும் பெருமான்
நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும், நெடியமாலும்
புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்டபோது தீத்திரளாய்
நின்றவன்.
கு-ரை: மெய்த்தீத்திரள் - ஞானத்திரளாய்
நின்ற பெருமான்
(தி.1 ப.69 பா.3) தென்னவன் - பாண்டியன் வில்லவன் - சேரன்.
செம்பியன்-சோழன்.
10.
பொ-ரை: வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை
மார்பிற் கொண்டவரும், வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும்
சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய
தாக்கினான். புலால் மணக்கும் வேல் வென்றி
|