பக்கம் எண் :

1156

2775.







அரையிலாருங் கலையில்ல
     வனாணொடு பெண்ணுமாய்
உரையிலரவ் வழலாடு
     வரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதின்மூன்
     றுடன்வெவ்வழ லாக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள்
     செய்கின்ற தோரச்சமே.      7
2776.







ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற்
     றதுங்கூற்றை யுதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வல
     னேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன்
     னுரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள்
     செய்யாநின்ற மொய்ம்பதே.
  8


     7. பொ-ரை: இடையில் பொருந்தும் உடை இல்லாதவன். ஆணும்,
பெண்ணுமாய் விளங்குபவன். அழலில் நின்று ஆடுபவன். ஒன்றாயின்றிப்
பலபலவேடம் கொள்பவன். பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து
அழித்தவன். கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும்
அப்பெருமான், செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும்.

     கு-ரை: அரையில் ஆரும் கலையில்லவன் - இடையிற் பொருந்தும்
உடையில்லாதவன், திகம்பரன், பெண்ணுமாய் ஆணுமாகி, (பெரிய,
தில்லைவாழ்), ஒன்றலர்காண் - பலபலவேடமாகும் பரன், விரவலார ஒள் -
பகைவர். அரையன் - கோச்செங்கட்சோழநாயனார்.

     8. பொ-ரை: மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள்
ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது, கூரிய
முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது.
ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும், அரக்கனும் ஆகிய
இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும்.