|
வடமன்நீடு
புகழ்ப்பூழி
யன்றென்ன வன்கோழிமன்
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோரச்சமே.
5 |
2774.
|
வெந்தநீறு
மெய்யிற்
பூசுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வதும்
இங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன்
செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள்
செய்கின்ற தோரேதமே. 6
|
பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன்
கட்டிய மூக்கீச்சரத்துறையும்
அடிகள் அச்சம் தரும் முறையில், அழல் போன்ற வாயில் நஞ்சுடைய
பாம்பை அரையில் கட்டியவர். நள்ளிருளில் பேயோடு, ஆரழலில் நடனம்
ஆடுபவர்.
கு-ரை:
நஞ்சுடைய பாம்பை அரையில்கட்டிப் பேயொடு
நள்ளிருளில் தீயில் நடமாடுவர். வடமன்நீடுபுகழ் - வடக்கில் மிக நீடிய
கீர்த்தி. பூழியன் - பாண்டியன். கோழிமன் - உறையூர்க் கிறைவன்.
அடல்மன் - போர்வேந்தன்.
6.
பொ-ரை: அகத்துறைப்பாடல்: பகைவரின் மானத்தை அழிக்கும்
பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடையவனுமான
கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த
ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத்திருமேனியராய்,
அடல் வல்லவராய், மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை
மாயமான முறையில் கவர்ந்து சென்ற தாகும்.
கு-ரை:
மெய்யில் நீறு பூசுவர், இருளில் ஆடுவர், இங்குவந்து
என்வளை கொள்வதும் ஒரு மாயமாம். இத்திருக்கோயில் மூவேந்தராலும்
வழிபடப்பட்டது என்பதை 3, 9, பாடல்களாலும் அறிக. மானதன்-
பகைவரது மானத்தை அழிப்பவன், மானத்தை உடையவன். நேரியன்
என்பவை சோழனையே குறித்தன.
|