பக்கம் எண் :

1154

2772.







அன்னமன்னந் நடைச்சாய
     லாளோ டழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை
     யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும்
     ஓங்கு செங்கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள்
     செய்கின்ற தோர்மாயமே.      4
2773.



விடமுனாரவ் வழல்வாய
     தோர் பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர்
     பேயொடு நள்ளிருள்


நிறைய. புலிசெங்கயல் ஆனை:- சோழபாண்டிய சேரர்க்குரிய மூன்றும்
மூவேறுயிர்களாயும் முறையே மும்மண்டலத்திலும் உள்ளன வாயும்
இருத்தல் அறிக. புலிவிற் கெண்டை என்பதில் வானவரம் பனாதலின்,
வானிற்றோற்றும் வில்லைக் கொண்டனர். “தென்னவனாயுலகாண்ட
செங்கணார்க்கு அடியேன்” மூக்கீச்சரத்தில் மூவேந்தர் திருப்பணியும்
உண்டு போலும்.

     4. பொ-ரை: தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ, சேர
மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய
கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும்
அடிகள், அன்னம் போன்ற நடையினை உடைய உமையம்மையாரோடு
அழகுற விளங்கி, மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள
காரணம் யாதோ?

     கு-ரை: சாயலாள் - உமையம்மையார். தென்னன் - தென்
பாண்டிநாட்டான். செங்கோல் ஏனையிரண்டும் மண்டலத்திலும்
ஓங்கும் பெருமை நாயனாருக்கு உண்டு என்று உணர்த்துகின்றதால்
மும்மண்டலத்தும் ஓங்கும் செங்கோல் என்க. தென்னன் என்பது பாண்டி
மண்டலத்துக்கு ஆவதால் ஆகுபெயர்.

     5. பொ-ரை: வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டியனாகவும்
உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை