பக்கம் எண் :

1153

2770.







வெண்டலையோர் கலனாப்
     பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த்
     துமையாளொடுங் கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின்
     வேனில் வேள்வெந்தெழக்
கண்டவர் மூக்கீச்சரத்தெம்
     அடிகள் செய்கன்மமே.      2
2771.







மருவலார்தம் மதிலெய்த
     துவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட்டி
     யதும்உல குண்டதால்
செருவிலாரும் புலிசெங்
     கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்தெம்
     அடிகள் செயும்பூசலே.       3


     2. பொ-ரை: வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப்
பலிதேர்தல், விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல், உமையம்மையோடு
கூடியிருத்தல், பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல், மன்மதனை
நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும்
எம் அடிகள் செய்த செயல்களாகும்.

     கு-ரை: கொண்டல் - கொள்ளுதல். காற்று, மேகம் எனல் இங்குப்
பொருந்தாது. வேனில்வேள் - மன்மதன்,

     3. பொ-ரை: போர்க்கருவியாகிய வில், புலி, கயல்
ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர, சோழ, பாண்டிய
மண்டலங்களுக்குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால்
கட்டப்பட்ட ஒப்பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த
போர்களில் மும்மதில்களை எய்தது, மால்மகனாகிய காமனை
எரித்தது ஆகிய உலகறிந்தனவாம்.

     கு-ரை: மால்மதலை-மன்தன். உருவில் ஆர-வடிவத்தில்