பக்கம் எண் :

1167

புலியூரில் எழுந்தருளிய இறைவர் மீது பாடிய இசை மாலை ஆகிய
இத்திரருபதிகத்தை ஓதி வழிபடுவாரைத் தீமைகள் அணுகா. அவர்தம்
வினைகள் மாயும்.

     கு-ரை: அம்தண்நல்லார் - அந்தணர். நல்லார் - பெண்டிர்.
சந்தம்-பண்ணிசை. தீமை உடையவை சேராமையால் வினைகள் ஒழியும்.



திருஞானசம்பந்தர் புராணம்

கன்னி மாவனங் காப்பென இருந்தவர்
     கழலிணை பணிந்தங்கு
முன்ன மாமுடக் கான்முயற் கருள்செய்த
     வண்ணமும் மொழிந்தேத்தி
மன்னு வார்பொழில் திருவ கூரினை
     வந்தெய்தி வணங்கிப்போய்ப்
பின்னு வார்சடை யார்திரு வக்கரை
     பிள்ளையார் அணைவுற்றார்.

                          -சேக்கிழார்.

ஞானசம்பந்தர் தேவாரத்தில்
     இறைவனுக்குரிய அபிடேகப் பொருள்கள். பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி.

                          -தி.1ப.61.பா5.

தேன் நெய் பால் தயிர் தெங்கிளநீர் கரும்பின்
     தெளி ஆன் அஞ்சாடும் முடியான்.

                          -தி.1ப.6பா.5.

ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்.

                          -தி.3. ப.1 பா.1

பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்.

                          -தி.3ப.15 பா.3 152