பதிக வரலாறு:
137ஆவது
பதிகத் தலைப்பிற் காண்க.
பண்:
செவ்வழி
ப.தொ.எண்:
258 |
|
பதிக
எண்: 122 |
திருச்சிற்றம்பலம்
2791.
|
விடைய
தேறி வெறிஅக் கரவார்த்த
விமலனார்
படைய தாகப் பரசு தரித்தார்க்
கிடமாவது
கொடை யிலோவார் குலமும் உயர்ந்தம்
மறையோர்கள்தாம்
புடைகொள் வேள்விப் புகையும்ப ருலாவும்
புகலியே. 1 |
1.
பொ-ரை:
விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு
இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக்
கலனாகக் கொண்ட வரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம், கொடை
வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில் வல்ல
அந்தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப்
பதியாகும்.
கு-ரை:
ஆர்த்த - கட்டியவிமலனார் - இயல்பாகவே பாசங்கள்
இல்லாதவர். அநாதிமலமுத்தர். பரசு - மழு. புடை - பக்கம். வேள்வி -
யாகம். உம்பர் - ஆகாயம். கலை நிலவிய புலவர்களிடர்களை தரு
கொடை பயில்பவர். (தி.1 ப.20 பா.3.)
புகலி
- புகலடைந்த காரணம் பற்றிய பெயர். அமரர் புகலால்
மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே.(தி.1 ப.63 பா.3).
|