2792.
|
வேலை
தன்னின் மிகுநஞ்சினை யுண்டிருள்
கண்டனார்
ஞால மெங்கும் பலிகொண் டுழல்வார்
நகராவது
சால நல்லார் பயிலும் மறைகேட்டுப்
பதங்களைச்
சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும்
புகலியே. 2 |
2793.
|
வண்டு
வாழுங் குழல்மங்கை யோர்கூ
றுகந்தார்மதித்
துண்ட மேவுஞ் சுடர்த்தொல் சடையார்க்
கிடமாவது
கெண்டை பாய மடுவில் லுயர்கேதகை
மாதவி
புண்ட ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும்
புகலியே. 3 |
2.
பொ-ரை: கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை, உண்டு இருண்ட
கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்குரிய
நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில்
வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும்.
கு-ரை:
வேலை-பாற்கடல்உண்டு என்னும் வினையெச்சம் இருள்
என்னும் வினைப்பகுதிகொண்டது. இருள்கண்டனார்-இருண்ட
திருக்கழுத்தினையுடையவர். ஞாலம்-பூமி உலகம். நாலம் என்பதன் மரூஉ.
உழல்வார்-திரிபவர். நல்லார் சாலப்பயிலும் மறை என்க. சால நல்லார்
என்றே கொள்ளலுமாம். கிளிகள் நல்லார் பயிலும், மறை(யைக்) கேட்டுப்
பதங்களைச் சொற்பயிலும் என்க. கிளித்தான் என்பது, வேற்றுமையல்வழி
(தொல், தொகைமரபு. 16) என்னுஞ் சூத்திரத்தின்படி வல்லெழுத்து மிக்கது.
3.
பொ-ரை: வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை
நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி
|