பக்கம் எண் :

1170

2794.







திரியு மூன்று புரமும் எரித்துத்
     திகழ்வானவர்க்
கரிய பெம்மான் அரவக் குழையார்க்
     கிடமாவது
பெரிய மாடத் துயருங் கொடியின்
     மிடைவால்வெயிற்
புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ்
     தண்புகலியே.              4


அணிந்த ஒளி மயமான தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெருமானுக்கு
இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக்களையும்,
தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கைகளையும் கொண்ட
புகலியாகும்.

     கு-ரை: மங்கை-உமாதேவியார். அவர் குழலில் வண்டுகள் வாழும்
என்றது சாதியடை. மதித்துண்டம்-பிறை. ‘திங்கட் பிளவு’. சுடர்ச்சடை,
தொல்சடை என்க. தொல்சடை என்னும் பண்பு தொகு மொழி, சுடர்
என்னும் அடைகொண்டதாதலின், சுடரை (-ஒளியை) உடைய தொல்சடை
என விரிக்க. தொல்சடை என்பதைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறலாகாது
என்பதை, ‘ஐம்பாலறியும் பண்பு தொகு மொழியும். . . தொழில்
தொகுமொழியும்........ பிறவும்’.......மருவின் பாத்திய, புணரியல் நிலையிடை
உணரத்தோன்றா’ என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் (எழுத்து, 482)
உணர்க. கேததகை-தாழை. மாதவி-குருக்கத்திக்கொடி. புண்டரீகம்-தாமரை.
பொய்கை-மானுட ராக்காத நீர்நிலை (சிந்தாமணி. 337.)

     4. பொ-ரை: வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை
எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை
அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய
மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி
புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும்.

     கு-ரை: ‘அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு’ (திருவாசகம்.
திருச்சதகம் 35) அரவக்குழையார்-சர்ப்ப குண்டலம் அணிந்தவர்.
மிடைவால்-நெருக்கத்தால், வெயில் புரிவு இலாத-வெயிலைச் செய்தலின்றி
நிழலைச் செய்தலுடைய. தட-பெரிய. பூம்பொழில்-மலர்க்கா.