பக்கம் எண் :

1174

2800.









எய்த வொண்ணா இறைவன் னுறைகின்ற
     புகலியைக்
கைதவ மில்லாக் கவுணியன் ஞான
     சம்பந்தன்சீர்
செய்த பத்தும் மிவைசெப்ப வல்லார்
     சிவலோகத்தில்
எய்தி நல்ல விமையோர்க ளேத்த
     இருப்பார்களே.                 11

      திருச்சிற்றம்பலம்



குளிக்கும். சுருதிப்பொருள்-வேதார்த்தம். வல்லவர்-வல்ல அந்தணர். மடுப்பு
அடுக்கும் எனப் பிரித்து, உட்கொள்ளுதலைப் பொருந்தும் என்று கொண்டு,
சுருதிப் பொருளையுட்கொண்டு என்க. வான் உளோர்-தேவர். பூதேவரும்
மாதேவரும் அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் புகலி.

     11. பொ-ரை: உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன்
உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய
ஞானசம்பந்தன் சிறப்புடன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை,
செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல தேவர்கள் ஏத்தப்
புகழுடன் இருப்பர்.

     கு-ரை: எய்த ஒண்ணா இறைவன்-பாசஞானத்தாலும்
பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்! (சித்தியார் சூ.9) “இமையோர்
கூட்டம் எய்துமாறு அறியாத எந்தர்” (திருவாசகம். திருச்சதகம். 25)
உறைகின்ற-திருக்கோயில்கொண்டு (கடல் கொண்ட கடை நாளிலும்)
அடியார்க்கு அருளற்பொருட்டு எழுந்தருளியுள்ள, கைதவம்-வஞ்சகம்.
நல்ல இமையோர்கள்-சிவலோகத்தை அடையச் சிவபுண்ணியம் செய்த
நன்மையையுடைய தேவர்கள். ஏத்த-எடுத்துப் புகழ்ந்து வழிபட,
இருப்பார்களே-பேரின்பம் நுகர்ந்து அழியாதிருந்து விளங்கும்
சாலோகமான பத முத்தியடைந்தாரே யாவர்.