பக்கம் எண் :

1173

நீண்ட நாரை யிரையாரல் வாரநிறை
     செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண்
     புகலியே.                     9
2779.







தடுக்கு டுத்துத் தலையைப் பறிப்பாரொடு
     சாக்கியர்
இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற்
     கிடமாவது
மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர்
     வானுளோர்
அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண்
     புகலியே.                     10


காண்போம் எனச்சூளுரைத்து முயன்று தோற்றுக் கழல்பணிய
நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள்
ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய
புகலிப்பதியாகும்.

     கு-ரை: கீண்டு-(நிலத்தைப்) பிளந்து. திருமால் செயல். கேழல்-
பன்றி. காண்டும்-காண்போம். பறந்துயர்ந்தார். பிரான் திருவடிகளை,
பணிய- பணிந்து வழிபட. நின்றார்க்கு-நின்ற சிவபெருமானுக்கு. நாரைக்கு
இரையாகிய ஆரல் மீன்கள் ஒழுகியோட, நிறைந்த செறு. செறு-சேறு.
மிக்கவயல் என்பது சந்தம் நோக்கி விரித்தல் விகார முற்றது.

     10. பொ-ரை: ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும்
தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர்களும்
இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம்பெருமானுக்கு
உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தணரும் வானுலகில்
வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும்.

     கு-ரை: பறிப்பார்-சமணர். உய்ப்பார்-செலுத்துவார், உண்டாக்குவார்
என்றவாறு. இறைஞ்சாத-தலைவணங்காத. வணங்கப் பெறாமை எம்மானது.
மடுப்படுக்கும் - (வைகறையில் நீர்) மடுவில்