|
*
* * * * * * * *
7 |
2797.
|
தொலைவி
லாத அரக்கன் உரத்தைத்
தொலைவித்தவன்
தலையுந் தோளுந் நெரித்த சதுரர்க்
கிடமாவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக்
கரப்பிலார்
பொலியு மந்தண் பொழில்சூழ்ந் தழகாரும்
புகலியே. 8
|
2798.
|
கீண்டு
புக்கார் பறந்தார் அயர்ந்தார்
கேழலன்னமாய்க்
காண்டு மென்றார் கழல்பணிய நின்றார்க்
கிடமாவது. |
7.
* * * * * * * *
கு-ரை:
தக்கன்-தக்ஷன் தகர்த்த-அழித்த. தையலாள்-உமாதேவியார்.
கொக்கு-மாமரம். புன்னைகள் பொன் போலப் பூக்கும், திரள் என்பது
இங்குத் திரட்சி என்னும் பொருளதாயிற்று.
8.
பொ-ரை: அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவனது
தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவபிரானுக் குரிய
இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத
வண்மையுடையயோ விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும்.
கு-ரை:
தொலைவு-தோல்வி. உரத்தை-வலியை. மார்பை எனலுமாம்.
தொலைவித்து-ஒழித்து, அவன் தலையும் தோளும் நெரித்த சதுரர் என்க.
சதுரர்க்கு-மூவர்க்கும் மேலாய முதல்வர். கலை-வேதாகம புராணேதிகாசாதி
கலைகள். மனத்தோர்-உள்ளத்தையுடைய அந்தணர். கரப்பு இலார்-
மறைத்தலில்லாமல் ஈந்துவப்பவர். கரப்பு-மறைப்பு. பொலியும்-விளங்கும்.
அம்-(அழகு) ஆரும்-நிறையும்.
9.
பொ-ரை: கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற திருமால்,
அன்னமாய்ப் பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி
|