பக்கம் எண் :

15

குருபாதம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம்
26ஆவது குருமகா சந்நிதானம்

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய

ஆசியுரை

ஆசையறாய் பாசம்விடாய் ஆனசிவ பூசைபண்ணாய்
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய் - சீசீ
சினமே தவிராய் திருமுறைகள் ஓதாய்
மனமே உனக்கென்ன வாய்.

                    - ஸ்ரீ குருஞானசம்பந்தர்

      ‘இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, கடவுளை வழிபட்டு முத்தி
இன்பம் பெறுதற் பொருட்டேயாம்’ என்பது யாழ்ப்பாணத்து நல்லூர்
ஆறுமுகநாவலரின் பாலபாடத்தில் காண்பது. பிறப்பை அறுப்பதற்கே
பிறப்பைக் கொடுக்கிறான் கடவுள் என்பது இதனால் நன்கு தெளிவாகிறது.

நோயும் மருந்தும்:

     பிறவி அறவேண்டுமானால் பிறப்பு எதனால் வருகிறது என்று அது
வரும்வழியைக் காணவேண்டும். பிறவி என்பது ஒரு நோய். அந்நோய்க்கு
மூலம் எது என்று தெரிந்தாலன்றிப் பிறவியை ஒழிக்க முடியாது.

     எனவே “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி
வாய்ப்பச் செயல்” என்ற திருவள்ளுவர் வாக்கிற்கு