இணங்கப் பிறவிநோய்
எதனால் வருகிறது என்பதை முதலில் அறிதல்
வேண்டும்.
ஆசை பாசம் சினம்
அகல:
அவா
என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும், தவாப் பிறப்பீனும்
வித்து, என்பது வள்ளுவர் வாக்கு. எனவே பிறவி ஆசையால் வருகிறது
என்பதை உணர்கிறோம்.
ஆசை
எங்கிருந்து வருகிறது என்று அதன் மூலத்தைக் காண
வேண்டும். ஆசைக்கு மூலம் ஆணவமாகிய பாசம். எனவே பிறவி
அறவேண்டுமானால் அதற்கு மூலமாகிய ஆணவம் நீங்க வேண்டும்.
ஆணவத்தை அகந்தைக்
கிழங்கு என்கிறார் குமரகுருபரர்,
அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே என்பது அவர்தம் மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ்.
கிழங்கு இருக்கும்வரை தாமரை தோன்றிக் கொண்டேதான் இருக்கும்.
ஆணவக்கிழங்கை அகழ்ந்தெடுத்துவிட்டால் அத்தொண்டர் உள்ளத்தே
இறைவி பிரகாசிப்பாள், என்பது இத்தொடரின் கருத்தாகும்.
ஆணவமாகிய
பாசம் நீங்கவேண்டுமானால் சிவபூசை செய்தல்
வேண்டும். சிவபூசை செய்ய வேண்டுமானால் அதற்கு முதற்படியாகச்
சற்குருநாதரிடம் சமயதீட்சை பெற்று அஞ்செழுத்தை ஓதி உணர்ந்து
உருவேற்ற வேண்டும்.
இந்நிலை
எய்தவேண்டும் என்றால், சினம் முதலாகிய அறுவகைக்
குற்றங்களும் அகலவேண்டும். அப்போது தான். குருநாதரை அணுகி
ஞானோபதேசம் பெறும் பக்குவம் உண்டாகும்.
சினம்
முதலிய குற்றங்கள் தீர வேண்டுமானால் திருமுறைகள்
ஓதவேண்டும். திருமுறைகளே நமக்குத் தாயாக இருந்து உதவி புரிய உறு
துணையாய் உள்ளன.
அத்திருமுறைகளைப்
பலகாலும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுதல் வேண்டும். மனமே மனிதனின் உற்ற நண்பன்; அமைச்சன். அதனால்
தான் குருஞானசம்பந்தர் மனத்தை அழைத்து உபதேசித்தார்.
|