இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தன் எனச் சுந்தரரும்
போற்றியுள்ளார்.
இசைத்தமிழ்
நூலார் கூறும் 103 பண்களில் ஞானசம்பந்தர் 22
பண்களில் திருப்பதிகங்களை அருளியுள்ளார். தாம் அருளிய தேவாரத்
திருப்பதிகங்களைப் பண்ணொன்றப் பாடிப் போற்ற வேண்டுமென
ஞானசம்பந்தர் அறிவுறுத்துவதை அவர் திருமுறைகளில் பல இடங்களிலும்
காணலாம். புள்ளிருக்கு வேளுர்த் திருப்பதிகத்தில்,
பண்ணொன்ற
இசைபாடும் அடியார்கள்
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் |
எனவும் கூறியருள்கிறார்.
திருவலஞ்சுழித் திருப்பதிகத்தில்,
.....ஞானசம்பந்தன்......தமிழ்மாலை
ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் தம்மை
வாதியா வினை....
என்றும்,
திருக்கோழம்பம் திருப்பதிகத்தில்,
பண்பயன்
கொளப்பாட வல்லார்க்கு இல்லை பாவமே
என்றும்,
திருமணஞ்சேரித் திருப்பதிகத்தில்,
பண்ணாரப்பாட
வல்லார்க்கு இல்லை பாவமே
என்றும் கூறியருள்கிறார்.
கடிக்குளம் திருப்பதிகத்
திருக்கடைக்காப்பில்,
|