வீடும்
ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானம்என் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை
பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே.
(தி.2 ப.2 பா.11) |
இது ஞானசம்பந்தரின்
இரண்டாவது திருமுறையில் இரண்டாவது
பதிகத்தின் இறுதிப்பாடல் காட்டும் உபதேசம்.
பதிகங்களும்
பண்களும்:
இவ்விரண்டாம்
திருமுறையில் 122 திருப்பதிகங்கள் உள்ளன. இவை
90 தலங்களில் பாடப்பெற்றவை.
இப்பதிகங்களில்
இந்தளப்பண் அமைந்த பதிகங்கள் 39, சீகாமரப்பண்
அமைந்த பதிகங்கள் 14, காந்தாரப்பண் அமைந்த பதிகங்கள் 29, பியந்தைக்
காந்தாரப்பண் அமைந்த பதிகங்கள் 14, நட்டராகப் பண் அமைந்த
பதிகங்கள் 16, செவ்வழிப்பண் அமைந்த பதிகங்கள் 10.
இப்பண்களின்
கட்டளை பேதங்களாக 12 காணப்பெறுகின்றன.
இத்தளத்தில் நான்கும், சீகாமரத்தில் இரண்டும், பியந்தைக் காந்தாரத்தில்
மூன்றும், நட்டராகத்தில் இரண்டும், செவ்வழியில் ஒன்றுமாகக்
குறிக்கப்பட்டுள்ளன.
பண்ணிசை
:
இசைக்கு
எளிதில் வயப்படுபவன் இறைவன், சிவபெருமானது
கால்விரலால் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு இடர்ப்பட்ட இராவணன்
சாமகானம்பாடி இறைவனது இன்னருளைப் பெற்றான். ஆனாய நாயனார்
வேய்ங் குழலில் திருவைந்தெழுத்தை இசைத்து முத்தி பெற்றதைப்
பெரியபுராணம் உணர்த்தும்.
அப்பர்
சுவாமிகள் தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் என்றும்,
கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறு அளப்பில என்றும்,
அருளிச் செய்கின்றார்.
ஞானசம்பந்தர்
இறையுணர்வை இசைத்தமிழ் வாயிலாகப் பரப்பிய
பெருமைக்குரியவராய் விளங்கினார் என்பதை, நாளும்
|