பக்கம் எண் :

255

இருக்கின்றன.

கல்வெட்டு:

     கி. பி. 10, 11, 12ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்த சோழ மன்னர்களது
கல்வெட்டுக்கள் கோயில்களில் காணப் படுகின்றன. நிலதானம்,
விளக்குத்தானம், விளக்குக்காக நிலதானம் ஆகியவை பற்றி இவை
குறிக்கின்றன. 25-1-1219ல் சிவபாதசேகரன் என்பான் முந்திய தானங்களை
ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்றான். இரண்டாம் இராஜராஜன் காலத்தில்
திருநாவுக்கரசர், திருவாதவூரடிகள், திருக்கண்ணப்பதேவர் இவர்களின்
திருவுருவங்களுக்கு நிலதானங்கள் செய்யப்பட்டன. முதலாம் இராஜராஜன்,
அவன் தேவியான லோகமாதேவியும், அவன் மகளும் (விமலாதித்தன்
மனைவி குந்தவை) அரசர்கட்டிய கோயிலுக்குத் திருவாபரணங்கள்
கொடுத்துள்ளார்கள்.

                    83. திருவாஞ்சியம்

     இலக்குமியை வாஞ்சித்து (விரும்பி) த் திருமால் பூசித்த தலமாதலின்
இப்பெயர் பெற்றது.

     மயிலாடுதுறை - பேரளம் தொடர்வண்டிப் பாதையில், நன்னிலம்
தொடர் வண்டி நிலையத்திற்கு மேற்கே 9 கி. மீ. தூரத்தில் இருக்கிறது.
காவிரித்தென்கரைத் தலங்களுள் 70-ஆவது ஆகும். நன்னிலத்திலிருந்து
பேருந்துகளில் செல்லலாம்.

     இறைவர் திருப்பெயர் வாஞ்சியநாதர். இறைவியார் திருப்பெயர்.
வாழவந்தநாயகி.

     தீர்த்தம் குப்த கங்கை. இது கோயிலுக்கு வடபால் இருக்கிறது.
கார்த்திகை ஞாயிறு நாள்களில் மக்கள் விசேடமாக நீராடுகின்றனர்.

     தலவிருச்சம் சந்தனமரம். இது பிராகாரத்தில் இருக்கின்றது.

     இயமன் பூசித்துப் பேறுபெற்றான். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு
இயமவாதனை இல்லை. இயமனுக்குத் தனி கோயிலும் இருக்கின்றது. இது
முத்தியளிக்கும் தலங்களுள் ஒன்றாகும். இது மூவராலும் பாடப்பெற்றது.
மூன்று பதிகங்கள் இருக்கின்றன.