பக்கம் எண் :

273

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த சுவாமிகள்

அருளிச்செய்த

தேவாரத் திருப்பதிகங்கள்

இரண்டாம் திருமுறை

1. திருப்பூந்தராய்

பதிக வரலாறு:

     இது சீகாழிப் பதிகங்களுள் ஒன்று. அவற்றுள் சில பதிகங்களுக்கே
வரலாறு காணப்படுகின்றது.

                        வினாவுரை

                      பண் : இந்தளம்

பதிகத் தொடர் எண்: 137                       பதிக எண் : 1

                     திருச்சிற்றம்பலம்

1470.



செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. 1


     1. பொழிப்புரை : செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய
சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த
பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள்