பரப்பினாற் போல
விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில்,
நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும்
திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில்
இளம்பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ?
சொல்வீராக.
குறிப்புரை:
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம்
முதலாக நான்கு பதிகத்தில், சிவபெருமானை முன்னிலையிற் பெற்று,
வினாவுதலும் விடைகூறியருள வேண்டுதலும் அமையப் பாடியிருத்தல்பற்றி,
இவற்றை வினாவுரை என்றனர். இத் தலைப்புடைய பிறமூன்றும் காண்க.
இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக்குறித்து
வினாவினார். முதல் வினா இறைவன் திருமுடிச் சார்புடையது. ஈற்றுவினா,
திருவடிச் சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம், காமதகனம்,
கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய
ஆக்கம் என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம்
அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும், அமலமும் (யானையுரித்த
வரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய
வரலாறும்), உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால்
விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் திருமேனிப் பொலிவும்,
மால்விடையூரும் மாட்சியும், மறைமுதலாகும் இறைமையும்,
அடியாரைக்காக்கும் அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன. இவ்வாறு
பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின்
எய்தும், திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன்
அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. பாக்கள்
வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது.
மருளுலகம் இவ்வுண்மையை உணராது. வேதத்தின் இயல்பே இதன் இயல்பு.
முதற்
பத்துத் திருப்பாடல்களுள்ளும் சொல்லீர் என்று
விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. சடையில் பிறையும், பாம்பும் ஒருசேர
வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு
விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற் கொண்டு,
பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில் இருப்பது குற்றம் என்பார்க்கு,
வேண்டுதல் வேண்டாமை இல்லான் ஆகிய சிவபிரான் சடையில், பகை
நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார்.
பிறையைச்சூடிய வரலாறு, சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த
இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள் கிடைப்பது உறுதி
என்னும் உண்மையை
|