1471.
|
எற்று
தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. 2
|
உணர்த்துவது. ஐந்தலைப்
பாம்பணிந்தது, பிறவி ஐவாய் அரவம் பொரும்
பெருமான் (திருவாசகம் 139) என்ற கருத்தினது.
தூமதி
சடைமிசைச் சூடுதல் தூநெறியா மதியான் என அமைத்தவாறே
(பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6.)
சோழவளநாடு
சோறுடைத்து இதிலுள்ள செந்நெல்
அம்கழனிப்பழனம் உடைமை, சீகாழிக்கும் உரித்தாயிற்று. கிழி - துணி.
கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர். புரை - ஒத்த, துன்னி -நெருங்கி,
துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள்
விழுந்துகிடக்கும் தோற்றம் வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும்
காட்சியை ஒத்திருந்தது என்க. புன்னை பொன்தாது உதிர்மல்கும்
அந்தண்புகலி (தி.3 ப.7 பா.9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம்
போல்வன ஆதல் அறியப்படும். பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது.
பாண் - பாட்டு பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. இதில், பிறையும்
பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவாற்றை வினாவினார்.
2.
பொ-ரை: எறிகின்ற தெளிந்த கடல் அலைகளில் ஏறிவந்த
சங்குகளும் இப்பிகளும் பொன்போல் விளங்கும் தாமரைகள் மலர்ந்த
வயல்களில் வந்து புகும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள்
சூழ்ந்து தொழும் அழகிய திருவடிகளை உடைய இறைவரே! அயிராவணம்
முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் உமக்கு ஏற்ற தன்மைத்
தாகுமோ? சொல்வீராக.
கு-ரை
: எற்று - எறிந்த. திரை - அலை. இப்பி - சங்கினத்துள்
முதலாவது இடம்புரியும் வலம்புரியும் சலஞ்சலமும் பாஞ்ச சன்னியமும்
ஆகிய சங்கினம் நான்கும் முறையே இப்பி முதல் சலஞ்சல முடியக்கூறும்
நான்காலும் ஆயிரம் ஆயிரமாகச் சூழப்பெற்ற பெருமையின. (நிகண்டு,
தொகுதி 3 பா. 73) பெற்றம் - எருது. பெற்றிமை - தன்மை, பேறு,
உயர்வுடையது. சிறந்த பாக்கியம் என்னுங் கருத்தில் வந்தது. பெருமகன்
என்பது பெருமான் என்று மருவிற்று. மகன் - தேவன், (மகள் - தேவி,
திருமகள், நாமகள்) பெருமானிர் - விளி,
|