பக்கம் எண் :

276

1472.



சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. 3
1473.

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்


ஏகாரம் ஈற்றசை, சீகாழிக்கழனியிற் சங்கும் இப்பியும் பொன்போல்
விளங்கும் தாமரைகளும் மிக்குள்ளன; பெற்றமேறுதல்-‘பசு வேறும் பரமன்’
விடையேறுதல்; பசுபதி என்பதைக் குறித்தது. இதில் விடை (பசு) ஏறும்
உண்மையை வினாவினார்.

     3. பொ-ரை: பொங்கி வரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு
செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து வீசும் நீர்வளம் சான்ற
பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் உயரிய பெரிய களிற்று யானையை
உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்துறையும் இறைவரே! உமது
திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள
மாண்புயாதோ? சொல்வீராக.

     கு-ரை: பொங்குதல் - உயர்தல், மிகுதல், புனல் - நீர், துங்கம்
-உயர்ச்சி. பவளத்தின் அடைமொழியால் மற்றையிரண்டின் நிறம்
வெளிப்படை, திரள் - திரட்சி; தொகுதியுமாம். களிறு - மதக்களிப்புடையது
(யானையின் ஆண்). மால் - பெருமை, மயக்கமுமாம். உரி-தோல், உகந்தீர்
- உயர்ந்தவரே, பங்கம் - கூறு. (பங்கு + அம்). அங்கம் - உறுப்பு., இங்குத்
திருமேனியைக் கொள்க. ஒன்றிய மாண்பு-அர்த்தநாரீச்சுரவடிவின் சிறப்பு,
யானையை உரித்தது ஆணவமல நாசம் என்பர், மங்கை பங்கு; போகியா
யிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் பற்றியும் உயிர்க்கு
இச்சாஞானக்கிரியா பலத்தை மிக விளைத்தல் பற்றியும் ஆயிற்று.
ஆற்றலுக்கு அதுவே ஏது. களிற்றையுரித்த போது தேவியார் அஞ்சியதாகச்
சொல்வது, ஞானமும் அஞ்சத் தக்க அத்துணைக்கொடியது இருண்மலம்
என்பதுணர்த்த. இதில் மெய்ப்பாதியில் மாதிருக்கும் உண்மையை வினாவினார்.

     4. பொ-ரை: பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால்
அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம்
கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய்