|
சோம
னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. 4 |
1474.
|
பள்ள
மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. 5 |
என்னும் சீகாழிப்பதியில்,
திங்களும் பாம்பும் தங்கிய செஞ்சடையுடையவராய்
எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை
விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து
அழித்தது ஏனோ? சொல்வீராக.
கு-ரை:
சேமம் - காவல், சேண் உயர்தல் - விண்ணில் மிக
வோங்குதல், பொழில் - சோலை, சோமன் - பிறை, அரவு - பாம்பு, காமன்
- மன்மதன், வெண்பொடி - (எரிந்த) சாம்பல், சிவத்தல் -கோபக்குறிப்பு,
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல், சொல், உரிச்சொல்.76)
மன்மத தகனம், யோகியாய், யோகமுத்தி உதவுதற் பொருட்டு நிகழ்கின்ற
இயற்கை. (சித்தியார் 70) இதில் காமனை எரித்தவாற்றை வினாவினார்.
5.
பொ-ரை: நீர்ப்பள்ளங்களில் இருக்கும் மீன்களை
இரையாகத்
தேர்ந்துகொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள்,
நாள்தோறும், பல இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த
பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய
செங்கையை உடைய சிவபிரானே பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச்
சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம்
யாதோ? சொல்வீராக.
கு-ரை:
நீர்ப்பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து
அலையும் நாரைகள் நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி.
நாரை பகுந்த (பிளந்த)வாய் உடைமையால் பகுவாயன புள்ளு என்றார்.
வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி
(தி.2. ப.2. பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை
இழிவறிந்துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண்
நோய் (குறள். 946) என்றதனால் அறிக. செஞ்சடைமேல் நீர்ப்பெருக்கை
வைத்த
|