1475.
|
மாதி
லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்
போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே.
|
6 |
|
* * * * * * * * * * |
7
|
1476.
|
வருக்க
மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
|
|
வியப்பைச் சொல்வீர்
என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்திய
செங்கையையுடைய சிவபெருமானை நோக்கி வேண்டுகின்றார். காட்டில்
இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில் இருக்கத்தக்க (கமண்டல) நீரைச்
சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய ஆற்றலை
வினாவினார்.
6.
பொ-ரை: அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம்
ஆடுவதும்,
ஊர் மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம்
நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய்
என்னும் சீகாழிப்பதியில், ஒளிமிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு
அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள் இரண்டனுள் ஒன்றில்
குழையையும் ஒரு காதில் சங்கத் தோட்டையும் அணிதற்குக் காரணம்
யாதோ? சொல்வீராக.
கு-ரை:
மாது-அழகு, இலங்குதல்-விளங்குதல், மருங்கு-பக்கம்,
போது-மலரும் பருவத்து அரும்பு, கமலம்-தாமரை, மது-கள், குழையும்
தோடும் காதணிகள், சீகாழியில் அழகிய மங்கையர் ஆடுதற்குப் பரிசாகத்
தாமரை, மலர்கள் தேனை ஒழுக்குகின்றன என்று நீர்நிலவளம்
உணர்த்தப்பட்டது. செம்மேனியில் வெண்ணீற்றை அணிவீர் என்று
அழைத்து, திருக்காதில் குழையும் தோடும் உடன் வைத்த புதுமையை
வினாவினார். தோடுடையான் குழையுடையான் (தி.1 ப.61 பா.8) தோலும்
துகிலும் குழையும் சுருள்தோடும்......... உடைத்தொன்மைக் கோலம் என்பது
திருவாசகம் (232).
7. *
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
8.
பொ-ரை: இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண்
குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும்
|