பக்கம் எண் :

279

துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே.   8
1477.



வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே.   9


     கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்
பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தக்க மாலாகிய இடபத்தின் மேல்
காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன்
அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ?
சொல்வீராக.

     கு-ரை: வருக்கம் - இனம், கடுவன் - ஆண்குரங்கு, மந்தி -
பெண்குரங்கு, தரு - மரம், மாந்திய - தின்ற, துரக்கும் - துரத்தும்,
(பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு.
வருவீராகிய அடிகேள் என்று விளித்து, இராவணனது ஆற்றலை
அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.

     9. பொ-ரை: மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய
கயல்மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும், மதில்கள் சூழ்ந்து நீண்டு
உயர்ந்த மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும்
சீகாழிப்பதியில், வேதங்களைப் பாடியும், இசைப்பாடல் போன்ற இனிய
மொழிகளைப் பேசியும் எழுந்தருளி விளங்கும் இறைவரே! கரிய
திருமாலும் பிரமனும் உம்மைத் தேடிக் காண இயலாமைக்குரிய காரணம்
யாதோ? சொல்வீராக.

     கு-ரை: சீகாழியில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வும்
நீள்வும், புரிசையும், நீர்வளமும், அந்நீரிற்பாயும் மீன்களின் செழுமையும்
குறிக்கப்பட்டன. வேதாகமங்கள் சிவபெருமான் திருவாக்காதலின்
சுருதிபாடிய பாண் இயல் தூமொழியீர் என்று விளித்தார். இதில், அரியும்
அயனும் அடிமுடிதேடிக் காணாமையை வினாவினார். பாடிய பாண் (பாட்டு)
இயலும் மொழி. தூமொழி, சுருதி - கேள்வி, எழுதாக்கிளவியாதலின்
கேள்வியால் தொன்று தொட்டுணர நின்றன. நேடி - தேடி.