பக்கம் எண் :

297

1503.



சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே. 2
1504.



கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.  3


உமை. பொருள் - சிவம். உரையுலாம் பொருள்:- மங்கைபங்கன்;
அம்மையப்பன்.

     2. பொ-ரை: அடியவர்கள் சந்தனம், உயர்ந்து வளர்ந்த கரிய அகில்,
குளிர்ந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆட்டித் தமது சிந்தையால்
நினைந்து பரவும் திருவான்மியூரில் வலக்காலில் விளங்கும் அழகிய கழல்,
இடக்காலில் விளங்கும் சிலம்பு ஆகியன ஆரவாரிக்கும் திருவடிகளை
உடையவரே! மாலையந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம்
நிறமாகக் கொண்ட காரணம் யாதோ? சொல்வீராக.

     கு-ரை: திருவான்மியூரில் அடியார், சந்தனமும், அகிலும், அபிடேக
தீர்த்தமும் கொண்டு, தியானம்புரிந்து வழிபடுஞ்சிறப்பும், அழகிய திருவடியில்
சிலம்பும் கழலும் கட்டவல்லராதலும், அந்தி வண்ணராதலும் இதிற்
குறிக்கப்பட்டன. சந்து-சந்தனம். கார் அகில்-கரிய அகிற்கட்டை, (புகைத்தற்
குரியது.) கழல்-வெற்றிகுறித்து வலக்காலில் அணிவதொரு படை. எருதின்
கொம்புபோன்ற வடிவுங்கூர்மையும் அன்றி அருப்புத் தொழிலும் அமைந்தது.
‘தாள் களங்கொளக் கழல் பறைந்தன’, கொல்லேற்றின் மருப்புப்போன்றன,
சுந்தரம் - அழகு, அந்தி -மாலையந்தி, வண்ணம் - அழகு.

     3. பொ-ரை: காடு, பள்ளமான கழி ஆகியன சூழ்ந்த கடலின்
புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்கள் சூழ்ந்து விளங்கும்
திருவான்மியூரில், புலித்தோலை ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய
அடிகளே, நீர், யானையின் தோலை உரித்துப் போர்த்தி அனலாடலை
விரும்பியது ஏனோ? சொல்வீராக.