1525.
|
தன்மை
யாருமறி வாரிலை தாம்பிற
ரெள்கவே
பின்னு முன்னுஞ்சில பேய்க்கணஞ் சூழத் திரிதர்வர்
துன்ன வாடை யுடுப்பர் சுடலைப்பொடி
பூசுவர்
அன்னமா லுந்துறை யானுமை யாறுடை
யையனே. 2
|
பின்னீரடியில் அவனது
திருக்கூத்து வன்மையும், இசைக்கருவிகளும்
கூறப்பட்டன.
எல்லாத்
தலங்களிலும் பரமேசுவரனது நடனம் வணங்கப் பெறும்
உண்மை சாத்திரமுணர்ந்தோர்க்கே விளங்கும். ஆடல் அமர்ந்துறைகின்ற
ஐயாறு என்ற அப்பர் அருண்மொழியும் அறிக. பாடல்-இசைப்பாட்டு.
முழவம்-தண்ணுமை, மத்தளம், குடமுழா. குழல்-வேய்ங்குழல்,
மொந்தை-ஒருகட்பறை, பண்ணாக ஆடல்-பண்ணோடு பொருந்த ஆடுதல்.
ஐயாறு:- பஞ்சநதம் என்பது வட மொழிப் பெயர்.
2.
பொ-ரை: அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின்
தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர்
எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார்.
கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை
மேனிமேல் பூசுவார்.
கு-ரை:
எள்க-இகழ. திரிதர்வர்-திரிதருவார், திரிவார்.
துன்னம்-துளைத்தல். தைத்தல். துன்னவாடை-கந்தை. துன்னங்கொண்ட
உடையான் (தி.2 ப.76 பா.2) துன்னலினாடை யுடுத்து (ப.1 ப.41 பா.3)
எனப் பிற பதிகங்களிலும் காணலாம்.
சிவபிரானியல்பை
அறிபவர் எவரும் இல்லை. அவர் பின்னும்
முன்னும் சில பேய்க் கூட்டம்சூழத் திரிவதைக் கண்டு பிறர்
இகழ்தலுங்கூடும். கந்தலணிவார். சுடுகாட்டுப் பொடி பூசுவார். அவற்றால்
அவனை அளந்தறியலாகாது. அன்னப்புட்கள் ஆலும் (-ஒலிக்கும், ஆடும்)
துறை.
|