பக்கம் எண் :

309

 6. திருவையாறு

பதிக வரலாறு:

     திருஞானசம்பந்தப்பெருமான் தொண்டர் எதிர்கொள்ள,
முத்துப்பல்லக்கில் சென்று திருவையாற்றை அடைந்து அந்நன்ன கரை
முன்னிறைஞ்சி, புந்திநிறை செந்தமிழின் சந்த இசையில், “புலனைந்தும்
பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம் மேலுந்தி அலமந்த
போதாக அஞ்சேலென்று அருள்செய்வார் அமருங்கோயிலை” அணுகி,
நீடுகோபுரத்தைத் தொழுது, உள்ளே புகுந்து வலங்கொண்டு தாழ்ந்து,
‘கோடல் கோங்கம்’ என்னும் இத்திருப்பதிகக்குலவுமாலையை, ‘நீடு பெருந்
திருக்கூத்து நிறைந்த திருவுள்ளத்து நிலைமைதோன்ற’ ஆடுமாற்றைப் பாடி
ஆடினார்.

                      பண்: இந்தளம்

ப. தொ. எண்: 142   பதிக எண்: 6

                     திருச்சிற்றம்பலம்

1524.







கோடல்கோங் கங்குளிர் கூவிள மாலை
     குலாயசீர்
ஓடுகங் கையொளி வெண்பிறை சூடு
     மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண்
     ணாகவே
ஆடு மாறுவல் லானுமை யாறுடை
     யையனே.                          1


     1. பொ-ரை: வெண்காந்தள், கோங்கம் குளிர்ந்த வில்வ மாலை
சீர்மிகு கங்கை, ஒளி வெண்பிறை ஆகியனவற்றை முடியிற் சூடிய ஒருவனும்
பாடற்குரிய வீணை, முழவம், குழல், மொந்தை ஆகியன தாளத்தோடு
ஒலிக்க ஆடுதலில் வல்லவனும் ஆகிய இறைவன் ஐயாறுடைய ஐயனாவான்.

     கு-ரை: கோடல் - வெண்காந்தள். கோங்கம் - கோங்குமரம். இதைக்
கன்னிகாரம் துருமோற்பலம் என்பர். கூவிளம் - வில்வம். இதன்
முன்னீரடியிற் சிவபெருமான் சூடுவனவற்றுள் ஐந்தும்